பவுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற மாற்று சேவைகள் இருக்கவே செய்கின்றன என்றாலும் டிவிட்டருக்கு சவால் விடக்கூடியதாக அவை இல்லை என்பதே விஷயம். இனி ஒரு புதிய குறும்பதிவு சேவை டிவிட்டர் அளவுக்கு புகழ் பெற முடியுமா? என்று தெரியவில்லை. இந்நிலையில் டிவிட்டருக்கு மாற்று என்னும் அறிமுகத்துடன் புதியதொரு டிவிட்டர் போன்ற சேவை உதயமாகியுள்ளது. http://txt.io/ என்னும் அந்த சேவை டிவிட்டரைவிட எளிமையானது என்றும் எனவே டிவிட்டர் பயன்படுத்த சிக்கலனதாக இருக்கிறது என கருதுபவர்களுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரை விட எளிமையான சேவை கிடையாது . அதை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.டிவிட்டரில் முகவரி கணக்கை துவங்கி ஒற்றை வரியில் அல்லது சிறியதான ஒரு சில வரிகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்தௌவங்கலாம்.அதன்பிறகு பின்தொடர்வது,குறிச்சொல் இடுவது என எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன. அவை சற்று மிரட்சியை தரலாம். ஆனால் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அவற்றை எளிதாக புரிந்து கொள்ளலாம். உண்மையில் இத்தகைய வசதிகளே டிவிட்டரை ஒரு சாதாரண சேவையில் இருந்து அசாதரண சேவையாக உயர்த்தியுள்ளது. இருப்பினும் டிவிட்டர் புரியவில்லை அல்லது சிக்கலானதாக இருப்பதாக நினைப்பவர்கள் இருக்ககூடும் என்ற நம்பிக்கையில் மேலே சொன்ன சேவை உருவாக்கப்பட்டுள்ளது. சேவை எளிமையானதோ இல்லையோ அதன் முகப்பு பக்கம் எளிமையானதாக உள்ளது.சொல்லப்போனால் படு எளிமை.கூகுல் கணக்கு மூலம் புதிய பக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள் என்னும் வாசகத்தை கிளிக் செய்து உறுப்பினராக சேர்ந்தால் இந்த சேவையை பயன்படுத்த துவங்கிவிடலாம். நினைப்பதை டைப் செய்து பதிவு செய்யலாம். ஆனால் அதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. உண்மையில் இந்த சேவை டிவிட்டரை காட்டிலும் எளிமையானது அல்ல; ஆனால் டிவிட்டர் ஏன் சிறப்பானதாக இருக்கிறது என புரிந்து கொள்ள உதவக்கூடியது.எளிமை என்பது பயன்பாடு சார்ந்தது என்றால் டிவ்ட்டர் தான் அதில் மன்னன். |
பொதுவாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லாவா சாப்ட் (Lavasoft) நிறுவனம், வரும் ஆண்டில் ஐந்து வகையான ஆபத்துகள் இருக்கும் எனப்பட்டியலிட்டுள்ளது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது தாக்குதல், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் தாக்குவதற்கு ஏதுவான இடம் பார்த்து நுழைதல், நாசம் விளைவிக்கும் தொகுப்புகள் தயாரிப்பு, விண்டோஸ் தவிர மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மொபைல் போன்களில் மால்வேர் புரோகிராம்கள் என இவற்றை வரிசைப்படுத்தியுள்ளது. (லாவா சாப்ட் நிறுவனம் 1999ல் தொடங்கப்பட்டது. இதனை ஒரிஜினல் ஆண்ட்டி ஸ்பைவேர் நிறுவனம் என அழைப்பார்கள். இதனுடைய இலவச ஆட்–அவேர் புரோகிராம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமானது. இதுவரை 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது) 1. 2009ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்லைன் கிரிமினல்கள் நடவடிக்கை 477% உயர்ந்து இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆட் அவேர் (AdAware) என்னும் ஆண்ட்டி மால்வேர் தளத்தில், நாசம் விளைவிக்கும் புதிய புரோகிராம்களின் பட்டியலின் எண்ணிகை அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. வழக்கமான முறையிலேயே இந்த மால்வேர் புரோகிராம்களின் வேலை தொடரும். அதே நேரத்தில் புதிய சிஸ்டம் புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வழியாகவும் இவை தங்கள் வேலையை மேற்கொள்ளும் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களை இந்த வகை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலக்காகக் கொண்டு நிச்சயம் மால்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்படும். மைக்ரோசாப்ட் இதனைத் தடுத்து, சிஸ்டத்தி னை பாதுகாப்பானதாக அமைக்கும் பட்சத்தில், புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தங்கள் தளமாக மால்வேர்கள் கொள்ளலாம். எனவே ஆப்பிள் மேக் மற்றும் பிற சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கென ஒரு ஆண்ட்டி வைரஸ் சிஸ்டத்தினை உருவாக்கிக் கொள்வது இந்த ஆண்டில் ஏற்படும். 3.ஸ்கேர்வேர் (Scareware) என்ற வகையில், நேரடியாகவே வைரஸ் புரோகிராமாக உருவாக்கப்படுபவற்றின் எண்ணிக்கையும் இந்த ஆண்டில் அதிகரிக்கும். இவற்றைத் தயாரித்து நிறுவனங்களிடம் பணம் பறிக்கும் வேலை அதிகமாகும். 4. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது அதிருப்தி கொண்டவர் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த ஆண்டில் உபுண்டு லினக்ஸ், புதிதாக விண்டோஸ் தவிர்த்து மற்ற சிஸ்டங்களை நாடுபவர்களிடம் இடம் பெறலாம். விண்டோஸ் அளவிற்கு இது உயராவிட்டாலும், விண்டோஸ் மீது வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்கள் இருக்கும் பட்சத்தில், லினக்ஸ் புதிய இடம் பெறலாம். அப்படி இடம் பெறுகையில், இதுவரை அதிகம் தாக்குதலுக்கு ஆகாத லினக்ஸ் தொகுப்புகள் பக்கம் மால்வேர் உருவாக்குபவர்களின் ஆர்வம் திரும்பலாம். 5. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இந்த ஆண்டு அதிகம் இடம் பெறலாம். கூடுதலான பயன் தன்மையுடன், குறைவான விலையில் இவை கிடைப்பதாலும், மொபைல் வழி நெட்வொர்க் எளிதாகக் கிடைப்பதாலும், சேவைக் கட்டணம் குறைப்பாலும், மொபைல் போன்களிடையே ஸ்மார்ட் போன் நிச்சயம் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும். அப்படி இடம் பெறுகையில், ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் மால்வேர் புரோகிராம்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படும். எனவே 2010 ஆம் ஆண்டு, பலமுனை பயமுறுத்தல்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என லாவாசாப்ட் கருத்து தெரிவிக்கிறது. |
தொழில்நுட்ப மேம்பாட்டின் வளர்ச்சி காரணமாக தற்போதுள்ள லேப்டாப் எனப்படும் மடிக்கனிணியின் அடுத்த அவதாரம் தான் விரைவில் வெளிவரவுள்ள இந்த டேப்ளட் எனப்படும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள். பார்ப்பதற்கு ஸ்லேட் போன்றே இருப்பதால் இதை ஸ்லேட் என்று அழைத்தாலும் தவறு இல்லை. இந்த டேப்ளட்கள் விரைவில் ஆப்பிள், டெல், ஹெச்பி, மோட்டோரோலா, லெனோவா என அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்த உள்ளன. லாஸ் வேகாசில் இந்த வாரம் நடைபெறவுள்ள புதிய நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில் இந்த டேப்ளட்கள் காட்சிக்கு வர உள்ளன. ஸ்மார்ட் போன்கள் எனப்படும் நவீன செல்போன்களுக்கும், லேப்டாப்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த டேப்ளட்கள் அமைந்திருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள 10 அங்குலம் அளவிலான டேப்ளட் குறித்த அறிவிப்பு இம்மாதம் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது. செல்போன்களில் ஐபோன் ஏற்படுத்திய மாற்றத்தை கம்ப்யூட்டர்களில் இந்த டேப்ளட் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவை விட குறைவான அளவில் கூட டேப்ளட்கள் வந்து புரட்சியை ஏற்படுத்தப் போவதாக என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜென் சுன் ஹுவாங் தெரிவித்துள்ளார். இந்த டேப்ளட்கள் 500 டாலர் என்ற அளவில் விலை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KODU) |
இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. 2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது. 3. வோம் (Worm) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும். அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். |